67 சத வீதமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானம்

நாட்டின் சனத்தொகையில் 67 சத வீதமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பூஸ்டர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை ஒரு கோடியே 37 இலட்சத்து 49 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு கோடியே 10 இலட்சத்து 54 ஆயிரத்து 101 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.