ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ஹெராயின் பறிமுதல்.தம்பதியினர் கைது.
குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இதுவரை இல்லாத அளவில் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 13 ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் வழியாக இந்தியா அனுப்பி வைக்கப்பட்ட டால்க் பவுடருடன் இந்த ஹெராயின் இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று இதனை இறக்குமதி செய்துள்ளது, மேலும் இதில் தொடர்புடைய சென்னை தம்பதி மற்றும் தில்லியில் வசிக்கும் சில ஆஃப்கனியர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசின் வருவாய் உளவுத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது, 1999.58 கிலோ மற்றும் 988.64 கிலோ என இரண்டு தனித்தனி பொதிகளாக இவை கடத்தப்பட்டுள்ளது.
காந்திநகரில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சர்வதேச சந்தையில் ஒரு கிலோவிற்கு 7 கோடி மதிப்பு கொண்ட உயர் ரக ஹெராயின் என்பது தெரிய வந்துள்ளது.