கனேடிய தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி ; மீண்டும் ஒரு சிறுபான்மை அரசாங்கம் ?
இடைத்தேர்தலாக நடந்த கனடாவின் 44 வது பொதுத் தேர்தல் இது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 44 வது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், அவர்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்கவைப்பது கடினமாகியுள்ளது.
இந்த தேர்தலில், கன்சர்வேடிவ் எதிர் தரப்பான எரின் ஓ டூலுக்கு எதிராக கடும் போட்டியை கண்ட அவர் முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ள 170 க்கு பதிலாக 157 இடங்களையே ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வென்றுள்ளது. 95சதவீத வாக்கு பதிவு நடைபெற்ற இடைத்தேர்தலில் கன்சர்வேடிவ் எதிர்க்கட்சி 122 இடங்களை வென்றது.
தீர்க்கமான இடங்களில் வெற்றி இடதுசாரி நவ-ஜனநாயக கட்சி மற்றும் பிரிவினைவாத குழு கியுபிகோயிஸ் கட்சி இடையே பிரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனால், கனடா மீண்டும் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தைக் கொண்டிருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஜஸ்டின் ட்ரூடோ ஒரு சிறுபான்மை அரசாங்கத்தையே வழிநடத்தினார்.
இந்த ஆண்டு கனேடிய இடைத்தேர்தலில் கோவிட் -19, காலநிலை மாற்றம், வீட்டுவசதி மற்றும் துப்பாக்கி கட்டுப்பாடு ஆகியவை முக்கிய விடயங்களாக பேசப்பட்டன.
ஜஸ்டின் ட்ரூடோவ இம்முறை தனது தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற போது ஒரு பெண்ணால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.