கப் ரக வாகனம் மோதி இளைஞர் பரிதாபச் சாவு!

காலி மாவட்டம், பிட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலவத்த வீதி, உஹன்ஒவிட்ட பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீதியில் பாதுகாப்பின்றி மிக வேகமாகப் பயணித்த கப் ரக வாகனம் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மானம்பிட்டிய, ஹத்தக பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய கப் ரக வாகனத்தின் சாரதியைக் கைதுசெய்துள்ள பிட்டிகல பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.