டிப்பர் வாகனம் மோதியதில் மோ.சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் பலி!

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்லகமுவ கிண்ணியா வீதி, வில்வெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டிப்பர் ரக வாகனம் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் மரணமடைந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்தவர் கிண்ணியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்
விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.