மகிந்தவின் குடும்ப வைத்தியர் எலியந்த வைட் கொரோனா தொற்று காரணமாக இறந்தார்

கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டாக்டர் எலியந்த வைட் காலமானார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரது பிரத்தியேக மருத்துவ ஆலோசகராக செயற்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது ஆலோசனையின் பெயரில் அரசு கொவிட்டை இல்லாமல் செய்வதற்கு பானைகளை ஆற்றில் வீசியும் , வானிலிருந்து தண்ணீர் தெளித்தும் சில காரியங்களை செய்தது.
அப்படியான பிரபல வைத்தியர் எலியந்த வைட் இன்று கோவிட் தொற்றினால் சற்றுமுன் கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தார்.