135 ரூபாய்க்கு விற்ற பூண்டை , மீண்டும் 450 ரூபாய்க்கு வாங்கி விற்ற சதொச ஊழல் : குஷன் குணவர்தன
சதொசவில் விற்பனைக்காக இரண்டு கொண்டேனர்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளை பூண்டை , பிரபல வியாபாரி ஒருவருக்கு , கிலோ ரூ 135 க்கு விற்கப்பட்டு , அப்படி விற்கும் பூண்டை சதொசவே மீண்டும் ரூ.450 க்கு வாங்கி மக்களுக்கு அதிக விலைக்கு விற்கும் ஊழல் நடந்துள்ளதாக , நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் குஷன் குணவர்தன பகிரங்கப்படுத்தியுள்ளார். இவர் அண்மையில் தன்னால் இவற்றை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என தனது பதவியை ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதுபோல சர்க்கரை, மாவு மற்றும் பாணுக்கான மாவு போன்ற பல பொருட்கள் இவ்வாறு விற்கப்பட்டு மீண்டும் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலிடத்திற்கு தகவல் அளித்து சிஐடியிடம் புகார் அளித்துள்ளதாகவும், மேலிடங்களுக்கு தெரியாமல் இதுபோன்றவை நடந்திருக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சதொசவுக்கு பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தன மீது அணுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி “பூண்டை கசக்க வேண்டாம். இதற்கு நாடாளுமன்றத்தில் பதில் சொல்லத் தேவையில்லை. நீதிமன்றத்தில் பதில் சொன்னால் போதும்” என தெரிவித்து அது குறித்த ஆவணங்களை சபையில் காட்டினார்.
வீடியோ: https://fb.watch/8bwvBDX5pa/