மட்டக்களப்பில் திடீரென நாகபாம்பாக மாறிய இளைஞன்!!

மட்டக்களப்பில் இளைஞன் ஒருவர் திடீரென நாகபாம்பு போன்று நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரின் மத்தியில் காந்தி சதுக்கத்திற்கு அருகில் குறித்த இளைஞன் பாம்பு போன்று படமெடுத்து, ஊர்ந்து செயற்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஓட்டோ சாரதியான அவர், ஓட்டோவைச் செலுத்திக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று இப்படி நடந்துகொண்டாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரம் வரை அவர் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.