மனைவி உயிரிழக்க முன்னரே மலர் சாலைக்குச் சென்று இறுதிச் சடங்கு மேற்கொள்வதற்கான பணத்தைச் செலுத்தியுள்ள கணவன்!
கொரோனா தொற்றுக்குள்ளான தனது மனைவியைத் கொன்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யத் தயாரான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு பின்னர் மறுமணத்துக்கு வியாபாரி ஒருவர் தயாரானதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவியைத் தாக்குவதற்காகப் பயன்படுத்திய கத்தி, தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
குறித்த தம்பதிக்கு 13 வயது மற்றும் 06 வயதான குழந்தைகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த பெண்ணின் மரணம் தொடர் பாக மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையில் மூக்கு மற்றும் வாய் பகுதிகளை இறுக்கமாகப் பிடித்தமையால் சுவாசிக்கச் சிரமம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்தது.
அதன் பிறகு குறித்த கணவர் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணையின் போது கொலை தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளியானமை தெரியவந்துள்ளது.
மனைவி உயிரிழக்க முன்னரே மலர் சாலைக்குச் சென்று இறுதிச் சடங்கு மேற்கொள்வதற்கான பணத்தைச் செலுத்தியுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு நீதிமன்ற உத்தரவின் படி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.