மீண்டும் தங்கம் விலை இன்று சரிவு;எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி குறைந்துள்ளது. அதன்படி நேற்று .4,413 ரூபாயாக இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ. 25 குறைந்து ரூ.4,388 க்கு விற்கப்படுகிறது.
நேற்று 35,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.35,104 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலையும் இன்றைய நிலவரப்படி குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 30 காசு குறைந்து ரூ.64.80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தங்கம் என்பது நம் உணர்வுகளில் கலந்த ஒரு உணர்வு பூர்வமான, விருப்பமான, ஒரு சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது.
இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படும் நிலையில், இன்றைய காலத்தில் தங்க நாணயம், தங்க பத்திரங்கள், தங்க ஃபண்டுகள், கமாடிட்டி சந்தையில் தங்கத்தில் முதலீடு என் பலவாறு செய்யப்படுகிறது.
இப்படி தங்கத்திற்கான தேவை என்பது பிசிகலாக மட்டும் அல்லாமல், முதலீட்டு ரீதியாகவும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அவ்வப்போது குறைந்தாலும். தொடர்ந்து ஏற்றம் காணும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், நேற்று காலை அமர்வில் பலத்த ஏற்றம் கண்ட பிறகு மாலை அமர்வில் மீண்டும் சரிவை நோக்கி முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று தொடக்கத்திலேயே பலத்த சரிவில் காணப்படுகிறது.
இது இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.