சேதபசளை உற்பத்தி பயிற்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் சுபிட்சத்தை நோக்கிய நாடு எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவுகளை வழங்குதல் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக சேதனப்பசளை உற்பத்தி தொடர்பிலான அலுவலக உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயல்முறை பயிற்சியானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற செயன்முறைப் பயிற்சியில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய நிலையப் பொறுப்பதிகாரி திரு. எம்.எஸ்.எம்.நிப்றாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் விவசாய போதானாசிரியர்களான திரு.எம்.கோகுல்ராஜ் மற்றும் திரு.எம்.எச்.எம் சஜாத் உள்ளிட்டவர்கள் கலந்து பயிற்சியினை வழங்கி வைத்தனர்.
அம்பாரை மாவட்டத்தில் தற்போது பிரதேச செயலகங்களின் கண்காணிப்பின் கீழ் சேதனப்பசளை தயாரிக்கும் பணி மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் இதன் ஒரு கட்டமாகவே ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் பிரதேச செயலாளர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக சேதனப்பசளை தயாரிக்கும் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப்பயிற்சி நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திரு. ஆர் சுபாகர், பிரதேச செயலக கணக்காளர் திரு. ப.பிரகஸ்பதி, சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர் திரு.என். கிருபாகரன் , திட்டமிடல் பிரிவின் சிரேஸ்ட உத்தியோகத்தர் திரு.கே.ரவீச்சந்திரன் அவர்களுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பயிற்சி வழிகாட்டலில் கலந்து கொண்ட அக்கரைப்பற்று கிழக்கு விவசாய நிலைய பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம். நிப்றாஸ் அவர்கள், சேதனப்பசளை தயாரிப்பு தொடர்பாக பல்வேறு விளக்கங்களை விரிவாகவும் தெளிவாகவும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.