25 இலட்சம் அன்பளிப்பாக வழங்கி வைக்கும் வைபவம்.
கோபம்கரை ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையினர்கள் இணைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் மேலும் புதிய கொரோனா சிகிச்சைப் பிரிவொன்வொன்றை நிர்மாணக்கும் பணிகளுக்காக ரூபா 25 இலட்சம் அன்பளிப்பாக வழங்கி வைக்கும் வைபவம் கண்டி தேசிய வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எச். உமர்தீன் நிதித்தொகையினை கையளிப்பதையும் இதில் கலந்து கொண்ட பாக்கிஸ்தான் நாட்டு வதிவிடப்பிரதிநிதியும் போகம்பரை பள்ளிவாசல் தலைவர் அப்சல் மரைக்கார், சுகாதார அமைச்சின் கோவிட் 19 கோரோனா தொற்றுப் பிரிவுக்கான பொறுப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி, மத்திய மாகாண கொரோனா செயலணியின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதை இங்கு படங்களில் காணலாம்.
(இக்பால் அலி)