மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி
மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு வகைகளில் தடுப்பூசி இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மையங்களில் நேரில் வந்து தடுப்பூசி போட்டுகொள்ள முடியாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
‘தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு வீட்டிலேயே தடுப்பூசிகளைத் தொடங்குகிறோம். இதற்காக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படும்’ என்று நிதி ஆயோக்கின் டாக்டர் வி.கே. பால் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாத முதியோர், சிறப்பு தேவை வேண்டுவோருக்கு வீட்டில் சென்று தடுப்பூசி செலுத்த மாவட்ட அளவில் அனைவரும் ஒருங்கிணைக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.