இலங்கையில் இன்று 1,146 பேருக்குக் கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 1,146 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 12 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 997 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 53 ஆயிரத்து 689 ஆக உயர்வடைந்துள்ளது.