யாழ்.தொண்டமனாறு நன்னீரேரியில் ஆணொருவரின் சடலம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி – தொண்டமனாறு நன்னீரேரியில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டமனாறு நன்னீரேரி பகுதியில் ஆணொருவர் சடலமாக மிதந்து கொண்டிருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து குறித்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படடு வருகிறது.