சந்திவெளி வாவியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் சந்திவெளி வாவியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் நேற்று முதல் காணாமல்போயிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முரக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 60 வயதுடையான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.