மதுபோதை தலைக்கேறியதில் வகுப்பறையிலேயே படுத்துத் தூங்கிய பள்ளி தலைமையாசிரியர்!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குலாப் புயல் ஆந்திரா, ஒரிசா மாநிலங்களுக்கு இடையே இன்று நள்ளிரவில் கரையை கடக்கவுள்ளது. இதையடுத்து வடக்கு ஆந்திரா மற்றும் தென் ஒடிசாவில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. இதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த குலாப் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் ஒடிஸா- ஆந்திரா இடையே கலிங்கபட்டினத்தை சுற்றியுள்ள விசாகப்பட்டினம்- கோபால்பூர் பகுதியில் இன்று நள்ளிரவு 95 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கிறது.
மணிக்கு 18 மைல் வேகத்தில் இந்த புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நள்ளிரவில் புயல் கரையை கடக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையின் 13 குழுக்கள் ஒடிசாவில் 5 குழுக்கள் ஆந்திராவிலும் முகாமிட்டுள்ளன. அப்பகுதிகளில் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல்,7 மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கையை ஒடிசா அரசு தொடங்கியுள்ளது. கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 15 மீட்பு குழுக்கள் முகாமிட்டுள்ளனர். 3 ,409 மக்கள் மீட்கப்பட்டு 204 முகாம்களில் நங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கக் கடல், அந்தமான் கடலின் மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குலாப் புயல் காரணமாக தமிழகம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.