ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய ஹர்ஷல் படேல்.
பெங்களூரு அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல் 14-வது ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மும்பை அணிக்கு எதிராக விளையாடும் போது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் மும்பை அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் விளையாடிய அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமின்றி அதில் ஹாட்ரிக் விக்கெடடையும் வீழ்த்தி அசத்தியிருந்தார்.
அதிலும் அவர் வீழ்த்திய 3 வீரர்கள் : ஹார்டிக் பாண்டியா, பொல்லார்டு மற்றும் ராகுல் சாகர் ஆகியோர் தான். 16-வது ஓவரில் முதல் மூன்று பந்துகளில் 3 விக்கெட்களை கைப்பற்றிய அவர் ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 17-வது பவுலர் என்ற சாதனையையும் இந்த போட்டியின் மூலம் படைத்துள்ளார்.
மும்பை அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 61 ரன்கள் தேவை என்ற நிலைமை இருந்தபோது ஹார்திக் பாண்டியா மற்றும் பொல்லார்டு ஆகியோர் களத்தில் இருந்தனர். அவர்கள் இருவரது விக்கெட்டையும் அடுத்தடுத்து வீழ்த்திய ஹர்ஷல் படேல் மூன்றாவதாக ராகுல் சாகர் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.