சௌபாக்யா திட்டத்தின் கீழ் பலாகன்றுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு.
செய்தித்தலைப்பு- ஜனாதிபதியின் சௌபாக்யா திட்டத்தின் கீழ் பட்டினியற்ற மரங்கள் நிறைந்த உலகம் வேலைத்திட்டத்திற்கமைவாக மட்டு மாவட்டத்திலுள்ள 14 பிரதேசசெயலக பிரிவுகளுக்கான பலாகன்றுகள் வழங்கிவைக்கும் பிரதான நிகழ்வு.
ஜனாதிபதியின் சௌபாக்யா திட்டத்தின் கீழ் சிறுவர் மகளீர் விவகார அமைச்சினால் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறுவர்களே முதன்மையானவர்கள் எனும் கருதிட்டத்தின் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தினால் இன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் பட்டினியற்ற மரங்கள் நிறைந்த சிறுவர் உலகம் எனும் ஜனாதிபதி செயலக வேலைதிட்டத்தின் ஒரு கட்டமாக மட்டு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் 1 பிரிவுக்கு தலா 300 பலாக்கன்று வீதம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சகல பிரதேசசெயலக பிரிவுகளிலுமுள்ள சிறுவர் நன்நட்த்தை பராமரிப்பு அபிவிருத்தி திட்ட உத்தியோகத்தர்களுக்கும் மாவட்டதிலுள்ள 10 சிறுவர் கழக உறுப்பினர்களுக்கும் இன்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரால் பலாக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட உதவி செயலாளர் ஏ.நவேஸ்வரன் மற்றும் மாவட்ட செயலக சிறுவர் நன்னடத்தை பாராமரிப்பு திணைக்கள பணிப்பாளர் எஸ்.
குகதாசன் பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி திட்ட உத்தியோகத்தர்கள் மாவட்ட சிறுவர் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.