உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரசிகர்களை அனுமதிக்க பி.சி.சி.ஐ.கோரிக்கை

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது. இதன் இறுதிப்போட்டி துபாய் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியின் போது ஸ்டேடியத்தில் குறைந்தபட்சம் 25000 ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.