நீர்பாசண அபிவிருத்திகென அரசாங்கத்தினால் நிதிகள் ஓதுக்கீடு.
கடந்த 10 வருடங்களிற்கு பின்பு மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசண அபிவிருத்தி திட்டத்திற்கென அரசாங்கத்தினால் 430 மில்லியன் ருபா நிதிகள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது-மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை கருணாகரன்.
வரும் 5 வருடத்திற்காக விவசாய அபிவருத்தியை கருத்திற் கொண்டு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்.இதில் 60 வீதமான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டத்தில் உள்ள நீர்பாசண குளங்கள் மற்றும்கால்வாய்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கத்தினால் நெல்லின் நீர்ணய விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வும் அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சேதனப் பசளை வேலைதிட்டதிற்கு அமுல்படுத்த சகல விவசாயிகளும் உதவ வேண்டுமென
ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கு திட்டத்தை மட்டு மாவட்டத்தில் அவ் வேலைதிட்டங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள முடக்க நிலையை தொடர்ந்து அதனை விரைவு படுத்தி விவசாய அமைச்சினால் விவசாயிக ளுக்கு கிடைக்க வேண்டிய சேதனப்பசளை திட்ட அனு கூலத்தை எந்தவித இடையுறும் இன்றி விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்க வேண்டி மட்டு மாவட்டத்திலுள்ள பிரதேச மட்டத்திலான பெரும்போக செய்கைக்கான அபிவிருத்தி திட்ட கலந்துரையாடல் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவிட்குட்பட்ட கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற போது இவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இங்கு பெரும்போக செய்கைக்கான விதைப்புகால அட்டவனை நீர்ப்பாசணம் சேதனப் பசளை பயன்பாடு நெல் அறுவடை களஞ்சிய ப்படுத்தல் சந்தைப்படுத்தல் கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்தல் விதை நெல் பாற்பண்ணையாளர்கள் பிரச்சினை காட்டுயானை தாக்கம் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இங்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சிணகௌரி டினேஸ் மாவட்ட விவசாய திணைக்கள மற்றும் நீர்பாசண உயர் அதிகாரிகள் மட்டு மாவட்ட கமநல திணைக்கள உயர் அதிகாரிகள் சுகாதார தரப்பினர் பொலிஸ் உயர் அதிகாரி உட்பட பலர் இதில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்துரையாடல கலந்துகொண்டனர்.