யாழ்ப்பாணம், கிளிநொச்சி மக்களுக்கான புதிய குடிநீர் திட்டங்கள்….
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் வருகின்ற அக்டோபர் 6ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் 24 ஆயிரம் மீட்டர் கணம் கொள்ளளவு கொண்ட சுத்தமான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய திட்டங்களை யாழ்ப்பாணத்தில் தொடங்கி வைக்கின்றார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 60 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறலாமென தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஒரு திட்டமான 5000 குடும்பம் பயனாளிகளுக்கு உப்பு நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் (SWRO) தொகுதி மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது..
இதற்கு மேலதிகமாக யாழ் நகரை மையமாகக் கொண்டு (JKWSSP) இன் 1 லட்சம் மக்களுக்கு பயன்தரும் 284 கிலோமீட்டர் தூரம் கொண்ட இன்னொரு குடிநீர் திட்டமும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இத்திட்டங்கள் அனைத்தும் 2023 க்குள் முடிக்கப்பட்டு சுமார் 3 லட்சம் மக்கள் சுத்தமான குடிநீரை பெறுவதற்கு ஏதுவாக அமையுமென தெரிவிக்கப்படுகிறது.