அஸாத் ஸாலியின் விளக்கமறியல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரை நீடிப்பு.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று அவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அஸாத் ஸாலி, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவில்லை.
கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இன ரீதியான சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அஸாத் ஸாலி கைதுசெய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அஸாத் ஸாலியால் இந்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.