கோட்டாபய அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடிக்கும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை.

“தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் கோட்டாபய அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவோம்.”
இவ்வாறு அபயராம விவகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகள் வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“தேசிய வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை விற்பனை செய்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நான் கடும் எதிர்ப்பு. அத்தகைய நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
கொரோனாத் தொற்றால் தற்போது வீதியில் இறங்கிப் போராட முடியவில்லை. வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் எமது எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெறும்” – என்றார்.