பெண்கள் சர்வதேச டென்னிஸ்: சானியா ‘சாம்பியன்’
ஆஸ்ட்ராவா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி செக்குடியரசில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் இறுதிஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)-சூவாய் ஜாங் (சீனா) ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கைட்லின் கிறிஸ்டியன் (அமெரிக்கா)-எரின் ரோட்லைப் (நியூசிலாந்து) இணையை 64 நிமிடங்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
மகுடம் சூடிய சானியா ஜோடிக்கு ரூ.18½ லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்த ஆண்டில் சானியா வென்ற முதல் பட்டம் இதுவாகும். மொத்தத்தில் அவரது 43-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.