காலியில் தன் குழந்தைக்காக பால்மா திருடியவருக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

இலங்கையின் காலி மாகாணத்தில் தனது குழந்தைக்காக 1150 ரூபா பெறுமதியான பால்மா டின்னை திருடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலி மிலிந்துவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயது தந்தை ஒருவரே தனத்தை குழந்தையின் பசியை போக்க இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் 5 லட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுதலை சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்பு மிலிந்துவ மாகாணத்திற்கு மருந்தினை பெற்றுக்கொள்ள சென்றுள்ளார் அந்த சமயத்தில் அங்கு பால்மா திருட்டில் ஈடுபாட்டை பொது கடை ஊழியர்கள் அவரைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.
பின்பு சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறியதாவது,
நாட்டில் உள்ள கொரோனா காரணமாக அவர் வேலை இழந்துள்ளதாகவும். மேலும் தனது குழந்தையின் பசியை போக்கவும் தான் திருட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் இவற்றை நிராகரித்த பொலிஸார் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்தையும் விசாரித்த பிறகே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.