துருக்கி பர்சாவில் இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம் திறந்து வைப்பு…

துருக்கியின் பர்சாவுக்கான இலங்கையின் கௌரவ துணைத் தூதரக அலுவலகம், தூதுவர் எம். ரிஸ்வி ஹசன், துணைத் தலைவர் மற்றும் ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் வெளியுறவுத் தலைவர் எஃப்கான் ஆலா, பர்சா மேயர் அலினூர் அக்தாஸ், பர்சாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பர்சா ஆளுநரகத்தின் அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன் அதிகாரப்பூர்வமாக 2021 செப்டம்பர் 25ஆந் திகதி திறந்து வைக்கப்பட்டது.
வரலாற்று நகரமான பர்சாவில் கௌரவ துணைத் தூதரகத்தைத் திறப்பதன் மூலம் துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்கனவே இருக்கும் நட்புறவு மற்றும் சகோதர உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் ஹசன் தெரிவித்தார்.