துறைமுகத்தில் உள்ள 500 சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்க தீர்மானம்….
கொழும்பு துறைமுக அதிகார சபையில் பொறுப்பிலுள்ள சுமார் 500 சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தமது சங்கம் இணங்கியுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலன்களே இவை என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் சீனி இறக்குமதியாளர்களுடன் இன்றைய தினம் (29) கலந்துரையாடவுள்ளதாக லங்கா சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த சீனி தொகையை சதொசவிற்கு வழங்கும் விலை தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சதொசவிற்கு வழங்கப்படும் சீனி, நாடளாவிய ரீதியில் உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.