பேயோட்டுவதாக கூறி பல இலட்சம் ரூபா கொள்ளையிட்ட இளம் யுவதி உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது!
தொழிலதிபர் வீட்டில் சுமார் ஆறு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி,பேயோட்டுவதாக கூறி பல இலட்சம் ரூபா கொள்ளையிட்ட இளம் யுவதி உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலவத்துகொட ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது நண்பர் மூலம் மந்திரவாதியொருவரிரை பற்றி அறிந்து கொண்டுள்ளார். நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த தொழிலதிபரான தனது தந்தையை குணப்படுத்தும் நோக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர் மற்றும் தாயுடன் பன்னிப்பிட்டிய, ஆரவ்வலவில் உள்ள மந்திரவாதியிடம் அவர் சென்றுள்ளார்.
தொழிலதிபரை குணப்படுத்தும் சாந்தி பூஜைக்கு லட்சரூபாய்க்கு மேல் மந்திரவாதியால் கோரப்பட்டதை அடுத்து தொழிலதிபர்கள் உடனடியாக அவருக்கு முன்பணம் செலுத்தியுள்ளார். இதனையடுத்து மே 22 ஆம் திகதி சாந்தி பூஜைக்காக மந்திரவாதியும் சிலரும், தொழிலதிபரின் வீட்டிற்கு சென்றனர்.
இதன்போது மந்திரவாதி, காளித்தாய் என கூறிய அவரது சகோதரி மற்றும் தாய், தந்தையரே இவ்வாறு சடங்கு நிகழ்விற்கு சென்று, தொழிலதிபரின் மகனிற்கு அவர்கள் பானம் அருந்தக் கொடுத்ததை பருகியதும் அவர் சுயநினைவை இழந்துள்ளார்.
இந்நிலையில் நோய் வாய்ப்பட்டிருந்த தந்தைக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, சுமார் அரை மணித்தியாலம் புகையடிக்கப்பட்டுள்ளார். வெள்ளை ஆடை அணிந்திருந்த சந்தேக நபர், தீப்பந்தத்தை ஏற்றி, வீட்டில் மின்சாரத்தை அணைக்குமாறு கூறிய மந்திரவாதியின் சகோதரி, தன்னில் காளி புகுந்துள்ளதாக கூறி, திரிசூலத்தை எடுத்துக் கொண்டு, கலையாடியபடி, அறையில் அலமாரிக்குள் பேய் பதுங்கியிருப்பதாக கூறி, அதை திறக்கும்படி கூறியுள்ளார்.
அத்துடன் நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு அருகில் வெள்ளைத் துணியை விரிக்கும்படி கூறி அலமாரிகுள்ளிருந்த நகைகளை வௌ்ளைத்துணியில் வைக்கும்படி கூறி அந்த நகைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
இதனையடுத்து நோய்வாய்ப்பட்டிருந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஓகஸ்ட் 23 ஆம் திகதி இறந்தபின்பே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகன், தலங்கம பொலிசில் அளித்த புகாரின் பேரில் சந்தேக நபரான 21 வயது யுவதி கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர் , சில நகைகளை மந்திரவாதி குடும்பம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் கைதான யுவதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.