NMRA தரவுகளை வீட்டிலிருந்தே நீக்கிய மென்பொருள் பொறியாளர் ! வெளியான முக்கிய தகவல்
தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) தரவுகளை அழித்தமை தொடர்பாக , கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய மென்பொருள் பொறியாளர் ஜூலை 9, 2021 அன்று 03:45 முதல் 10:24 வரை ஐந்து மணி நேரம் அவரது வீட்டிலிருந்தவாறே இலங்கை தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுகளை அகற்றியுள்ளமை தெரிய வந்துள்ளதாக துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் மூன்று பேராசிரியர்களின் உதவியுடன் சிஐடி நடத்திய விசாரணையின் போது இந்த தகவல் தெரியவந்ததாக அவர் மேலும் கூறினார்.
இது மருத்துவ மாஃபியாவின் நலன்களுக்காகவும், ‘டிஜிட்டல் பயங்கரவாதம்’ என அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.
எபிக் லங்கா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தரவு மேலாண்மை அமைப்பிற்காக மருந்து ஆணையம் மாதந்தோறும் ரூ. 500,000/- வழங்கியதாக திலீப் பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், சந்தேக நபர் நூறாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றிய தரவை நீக்கிவிட்டதாகவும், அதை செயல்படுத்த விரும்பும் எவரும் கடுமையான குற்றம் என்றும் , சந்தேகநபர் இந்த குற்றத்தை செய்வதற்கு 10 நாட்களுக்கு முன் , தனது ராஜினாமா கடிதத்தை எபிக் லங்கா டெக்னாலஜிஸ் பிரைவேட் நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளதை அவர் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.
எனவே, இது ஒரு குற்றம் அல்ல, வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் என விசாரணைகளின் போது உறுதியானது என்றார் திரு பீரிஸ்.
விசாரணை முடியும் வரை சந்தேக நபருக்கு ஜாமீன் வழங்கவும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.