நவகிரி கிராம பிரதான வீதி புனருத்தான வேலைகள் ஆரம்பித்து வைப்பு.
மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நவகிரி கிரம பிரதான வீதிக்கான புனருத்தாரன வேலைகள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனினால் (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்~வின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைப்பிரகடனத்திற்கமைவாக மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நவகிரி கிராமத்திற்கான இரண்டு கிலோமீற்றர் பிரதான வீதி புனருத்தான வேலைகள் சுமார் 52 மில்லின் ரூபாய் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
நவகிரி கிராம மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதே செயலாளர் திருமதி. ராகுலநாயகி, வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர் எஸ். வரதன், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திகாந்தன் கருத்துத் வெளியிடுகையில் நாம் ஓர் அறிவுபூர்மான சமுகக் கட்டமைப்பினை உருவாக்கவேண்டும். அதிலே வீதிகள், போக்குவரத்து, கல்வி, குடிநீர், சமுக அபிவிருத்தி இவற்றுக்கு மேலதிகமாக தனிநபர் அபிவிருத்தி இடம்;பெறவேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் மக்கள் மற்றவர்களிடம் எதிர்பாராது சுயமாக உழைத்து பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இலங்கை சுதந்திரம் பெற்றதன்பின்னர் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் 38வது குடியேற்றக் கிராமமாகிய நவகிரி கிராமம் இதுவரை காலமும் எவ்வித அபிவிருத்தியினையும் கண்டதில்லை எனவும், தற்போது பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனினால் இக்கிராமம் ஒளிபெறுகின்றது என பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.