காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்…

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் செல்லுடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 2022 மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் காலாவதியாகும் நாளிலிருந்து மேலும் 06 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.