வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களால் ஆபத்து.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களால் ஆபத்து அவ்வாறு வருகை தருபவர்கள் தொடர்பில் எந்த தகவலும் சுகாதார பிரிவினருக்கு பெற்றுகொடுக்காமை தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவா் உபுல் ரோஹண தெரிவித்துள்ளாா்.
இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போது வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் நாட்டுக்கு வருகை தந்துகொண்டே இருக்கிறாா்கள். வெளிநாடுகளிலுள்ள தொழிலாளா்கள் மற்றும் சுற்றுலாபயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை.வெளிநாட்டிலிருக்கும் தொழிலாளா்களும் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வரவே நீண்ட காலமாக காத்திருக்கிறாா்கள். அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவது சிறந்த வேலைத்திட்டமாகும்.
அதுமாத்திரமல்லாமல் சுற்றுலா பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துகொண்டே இருக்கிறாா்கள். இருந்தபோதிலும் இந்த குழுவினா் நாட்டுக்கு நுழையும் போதும் அதன் பின்னரும் இடம்பெறும் செயற்பாடுகள் தொடர்பில் எங்களுக்கு எவ்வித தெளிவும் இல்லாத நிலையே இருக்கிறது.
ஒருவர் கடந்த காலங்களில் இருந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி பெற்றுகொண்டிருந்தால் பி.சி.ஆர். பரிசோதனையின்றி அவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அவ்வாறு அனுமதிக்கப்படுபவர்கள் தொடர்பில் பின் விபரங்களை பெற்றுகொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் எங்கு
செய்லிகறார்கள், எந்த உந்த பிரதேசங்களுக்குச் செல்கிறா்ாகள் என்ற விபரத்தை பெற்றுகொள்ள முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடு எமக்கு எவ்வளவு அவசியமோ, அதேபோன்று மக்களின் சுகாதார பாதுகாப்பும் எமக்கு அவசியமாகும். காரணம் அவர்கள் சமூகமயப்படுதல் மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.
அதனால், வெிளநாடுகளிலிருந்து வருபவர்கள் தொடர்பிர் சரியான தகவல்களை சுகாதார அதிகாரிகளுக்கு பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் தொடர்பில் சரியான தகவல்களை திரட்ட வேண்டியதே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பிரதாக பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளாா்.