இன்று முதல் திறக்கப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகம் இன்று (01) முதல் திறக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக இன்று (01) முதல் சேவைகள் வழங்கப்படும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய 0112 677 877 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.