நைஜீரியா மற்றும் நைஜர் நாடுகளின் எல்லையில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலி.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பல் நைஜீரியா மற்றும் அதை சுற்றியுள்ள நைஜர் நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நைஜீரியாவின் சோகோடா நகரில் உள்ள கிராமத்திற்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் பொதுமக்கள் மீது நேற்று முன் தினம் துப்பாகிச்சூடு தாக்குதல் நடத்தியது. அதேபோல், நைஜரிலும் ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண்கள் உள்பட பலரை ஆயுதமேந்திய கும்பல் கடத்தி சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.