வடகொரியாவின் ஆட்சி குழுவில் இடம்பிடித்த கிம் ஜாங் உன்னின் சகோதரி!
வடகொரியா நாட்டின் அதிபராக இருந்து வரும் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங். தனது சகோதரனின் முக்கிய ஆலோசகராக இருந்து வருகிறார். கிம் யோ ஜாங் வட கொரியா நாட்டின் செல்வாக்கு மற்றும் அதிகாரம் மிகுந்த நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் வடகொரியா ஆளுங்கட்சியின் முக்கிய பொறுப்பிலும் கிம் யோ ஜாங் இருந்து வருகிறார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் கோ ஜாங்க்கு தற்போது மிக உயர்ந்த அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பிரதான ஆலோசகராக அறியப்பட்ட கிம் கோ ஜாங் அந்நாட்டு அரசை வழிநடத்தும் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதில் இடம் பெற்றிருக்கும் இளம் வயது மற்றும் ஒரே பெண் கிம் கோ ஜாங் மட்டுமே.
வடகொரியாவின் மாநில விவகார ஆணையம் என்பது நாட்டை ஆளுகின்ற குழுவாகும். அண்மையில் இந்த குழுவிலிருந்து சிலர் வயதின் காரணமாக ஓய்வுபெற்றனர். சிலர் வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டனர். இதனையடுத்து தற்போது புதிதாக 8 பேர் இந்த ஆட்சிக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 8 பேரில் ஒருவராக கிம் யோ ஜாங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.