ஆட்பதிவு திணைக்கள சேவைகள் மீண்டும் ஆரம்பம்.

பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்கள் என்பன எதிர்வரும் 04ஆம் திகதி மீண்டும் சேவைகளுக்காக திறக்கப்படுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் ,எவ்வாறாயினும் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான ஒருநாள் சேவை இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.