இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 26,727 பேருக்கு தொற்று உறுதி!
நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,727 பேருக்குக் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,37,66,707 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 277 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,48,339 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2,75,224 ஆக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 28,246 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,30,43,144 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,75,224 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் இதுவரை 89,02,08,007 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64,40,451 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,727 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், கேரளாவில் மட்டுமே 15,914 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 122 பேர் உயிரிழந்தனர். நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 97.85% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக உள்ளது.