ஊஞ்சல் கயிறு இறுகியதால் சிறுமி பரிதாபகரமாக மரணம்!

மாத்தளை மாவட்டம், நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணுமுலுயாய பிரதேசத்தில் ஊஞ்சல் கயிறு இறுகியதால் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சிறுமி, நாற்காலியின் உதவியுடன் தனது வீட்டிலுள்ள கூரை சட்டத்தில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடியுள்ளார்.
இதன்போது நாற்காலி விலகியதால் ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தை இறுக்கியுள்ளது.சடலம் மீதான பிரேத பரிசோதனை தம்புள்ளை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.