அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம்….
அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி அத்தியாவசிய சேவைகளை அடையாளம் கண்டுக்கொண்டு, குறித்த ஊழியர்ககளை கடமைக்கு அழைக்கும் அதிகாரம் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு சாரும் என கூறப்பட்டுள்ளது.
உத்தியோகப்பூர்வ வாகனங்களைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு மேற்படி நியதி பொருந்தாது எனவும், அவர்கள் வழமைபோன்று கடமைக்குச் சமுகமளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அரச ஊழியர்கள் இணைய வழியின் ஊடாக தமது கடமைகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கடமைகளுக்கு அழைக்கப்படும் நபர்கள், கடமைக்கு சமூகமளிக்காத நாட்களில் இணைய வழியாக தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் ஏனைய நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களை கடமைக்கு அழைக்க வேண்டாம் எனவும், அவ்வாறான ஊழியர்கள் அத்தியாவசிய கடமைகளுக்காக மாத்திரம் அழைக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.