கிளிநொச்சியில் மரணித்த மூதாட்டிக்குக் கொரோனா!

கிளிநொச்சியில் உயிரிழந்த வயோதிபப் பெண் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 72 வயதுடைய மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
அவருடைய பி.சி.ஆர். மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
அதன்போதே அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.