வான்வழி நடவடிக்கை திறன்களை மேம்படுத்திக்கொண்ட முப்படையினரின் பிரியாவிடை நிகழ்வு.
இலங்கை இராணுவத்தின் வான்வழி நடவடிக்கை திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்கான “கம்பெட் ஏயார்போர்ன் அன்ட் பாத் பைண்டர்” வான்வழி நடவடிக்கை பாடநெறி இல:2 மற்றும் அடிப்படை வான்வழி நடவடிக்கை பாடநெறி இல:86 என்பவற்றை நிறைவு செய்த 74 முப்படையினருக்கான பட்டமளிப்பு நிகழ்வு புதன்கிழமை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினரான பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வருகையை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, இடர் தடுப்பு படைப்பிரிவின் தளபதி மேஜல் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, கொமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி ஆகியோரால் தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் காணப்படும் இராணுவம்,கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சி பாடநெறிகள் உள்ளடக்கியதான கம்பெட் ஏயார்போன் மற்றும் பாத்பைண்டர் (CAPC) பாடநெறி ஜூலை 26, 2021 அன்று அதிகாரி ஒருவர் மற்றும் இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் சிறப்புப் படையின் 25 சிப்பாய்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது. இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படைகள்,முப்படையின் சிறப்பு படையினர், விமான படையணியினரின் “பாத்பைண்டர்” நடவடிக்கைகளின் போதான வான்வழி நடவடிக்கை திறன்களை மேம்படுத்துவதற்காக மேற்படி பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி நிகழ்வின் போது CAPC பயிற்சிகளை நிறைவு செய்த சிறப்பு நடவடிக்கை படை அதிகாரியொருவர் மற்றும் 25 சிப்பாய்களுக்கு பிரதம விருந்தினரால் சின்னங்கள் அணிவிக்கப்பட்டன. நாட்டில் நிலவும் சுகாதார அச்சுறுத்தல் காரணமாக மட்டுபடுத்தப்பட்ட அளவிலானோர் மட்டுமே மேற்படி நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்ததோடு, புதிய வான்வழி நடவடிக்கை செயற்பாடுகளுக்கான சின்னங்களை தங்களது தோழ்களில் அணிந்துகொண்ட பட்டதாரிகளுக்கு தளபதி வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்தோடு நாட்டின் நலனுக்கான செயற்பாடுகளின் போது அவர்களின் அவசியம் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
அதனையடுத்து பாடநெறியை நிறைவு செய்தவர்கள் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் பிரதம விருந்தினருடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர். மேற்படி நிகழ்வானது அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் நிறைபெற்றதோடு, நிகழ்வின் போது இராணுவ தளபதி பட்டதாரிகளுடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டமையும் சிறப்பம்சமாகும்.
மேற்படி பாடத்திட்டத்தின் கீழ் மேம்பட்ட வழித் தடங்களை அறிந்து விமானங்களை செலுத்தும் நுட்பங்கள் மற்றும் முதலுதவி செயல்முறை, தரை, காற்று அல்லது நீர் ஆகிய மூவிடங்களிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நுட்பங்கள், கைவிடப்பட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல், குறித்தல் மற்றும் பாதுகாத்தல், வான்வழித்தடங்களின் வரைபடங்கள் மற்றும் விமானங்களை இயக்குவதற்கான நுட்பங்கள், உயிர் பாதுகாப்பு மற்றும் சிறப்பு வன பயிற்சிகள் பகல் மற்றும் இரவு வேளைகளில் உபகரணங்களுடனான நடவடிக்கைகள் மற்றும் நீர் தாவல்கள் உட்பட பாராசூட் நடவடிக்கைகள் என்பன் தொடர்பில் கட்டுநாயக்க மற்றும் இரத்மலானையில் உள்ள விமானப்படை தளங்களுக்குள் பெற்றுக்கொண்ட பயிற்சி திறன்கள் என்பவற்றை படையினர் வெளிப்படுத்தினர். அத்தோடு இப்பாடத்திட்டத்தின் போது காலநிலை அவதான நிலையத்தின் அறிவுறுத்தல்களை அறிந்து நீர் சார்ந்த இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
2021 ஜூலை 26 ம் திகதி 48 சிப்பாய்களுடன் ஆரமபமான அடிப்படை வான்வழி நடவடிக்கைகள் தொடர்பான பாடநெறி இல:86 இனை வெற்றிகரமாக நிறைவு செய்த கொமாண்டோ மற்றும் சிறப்பு படையின் சிப்பாய்கள் பரசூட் வீரர்களுக்கான BAC 5 நாள் உபகரண நடவடிக்கை பயிற்சிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
பல ஆண்டுகளாக, இலங்கை பாராசூட் திறன்களை உயர் நிலைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக, கொமாண்டோ படையணியினால் பாராசூட் பயிற்சிப் கல்லூரி நிறுவப்பட்டதோடு இலங்கை ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அடிப்படை வான்வழி பாடத்திட்டம் திறந்த வெளியில் பறப்பது தொடர்பிலான பாடத்திட்டம், வான்வழி பயிற்றுவிப்பாளர் மற்றும் ஜம்ப் மாஸ்டர் பாடநெறி ரிகர் பாரடநெறி வான்வழி போர் மற்றும் பாத்பைண்டர் பாடநெறி , பரசூட் தொடர்பிலான பயிற்சிகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி பிரியாவிடை நிகழ்வுகளின் போது பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விஜேசூரிய, 14 வது படைப்பிரிவு தளபதியும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கிறிஷாந்த ஞானரத்தன, 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சாந்த அலுவிஹாரே, 65 வது படைப்பிரிவு தளபதி அனில் சமரசிறி, கொமாண்டோ மற்றும் சிறப்பு படைகளின் பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் பாராசூட் வரலாற்றுகமைய அதன் முதல் அடிப்படை வான்வழிப் பயிற்சி வகுப்பு 29 டிசம்பர் 1979 அன்று இந்தியாவில் நிறைவடைந்திருந்தது. இதன்போது 03 அதிகாரிகள் மற்றும் 23 சிப்பாய்கள் இந்தியாவின் ஆக்ராவில் உள்ள பாராசூட் பயிற்சி பள்ளியில் பட்டம் பெற்றனர். கமாண்டோக்களின் தந்தையாகக் கருதப்படும் மேஜர் எஸ் டி பீரிஸ், இலங்கை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் ஆரம்பித்து வைக்கும் முகமாக, பாராசூட் மூலம் பறந்த முதல் இலங்கை பரசூட் வீரர் ஆவார். அதனையடுத்து நாட்டிற்குள் பாராசூட் பயிற்சியைத் தொடங்குவதற்காகவும், இராணுவப் படைகளின் வான்வழி செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காகவும் கொமாண்டோ படையினருக்காகவும் நாட்டின் முதல் வான்வழிப் பாடநெறி கணேமுல்ல கொமாண்டோ முகாமில் நடத்தப்பட்டது.