மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படுகின்றன!

இலங்கையில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (03) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில்,
நாளையதினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.