வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பலின் கொடூர தாக்குதலில் வயோதிபர் மரணம்! சந்தேகத்தில் மூவர் கைது.
வீடொன்றுக்குள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த வயோதிபர் ஒருவரை அடித்துப் படுகொலை செய்துள்ளது.
இந்தச் சம்பவம் பதுளை, லிதமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இரும்புக் கம்பியால் குறித்த நபர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
பதுளை, லிதமுல்ல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பதுளைப் பகுதியைச் சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுகளையுடைய இளைஞர்கள் மூவரைச் சந்தேகத்தில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.