முல்லைத்தீவு மாவட்டம் ஒரு பார்வை.
முல்லைத்தீவு ஒரு நோக்கு
முல்லைத்தீவு மாவட்டம் (Mullaitivu District) இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும்.இலங்கையின் சுதந்திரத்திற்கு பிற்பாடு மேற்தகாள்ளப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களின்படி1978 ஆம் ஆண்டு தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டம் ஒரு நிர்வாக மாவட்டமாக காணபடுகிறது.இதன் தலைநகரம் முல்லைத்தீவு நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.வன்னி இராச்சியம் என்று அழைக்கப்பட்ட பெரும்பகுதி முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அமைந்துள்ளது.
வடக்கே கிளிநொச்சியையும் கிழக்கே இந்துசமுத்திரத்தையும், மேற்கே மன்னாரையும், தெற்கே திருகோணமலை மற்றும் வவுனியாவையும் எல்லைகளாக கொண்ட ஒரு மாவட்டமாகும்.
2517 சகிமீ பரப்பளவு.
96,477 மக்கள் தொகை.
78 360 வாக்காளர்கள்
44 174குடும்பங்கள்
632 ஊர்கள்
136 நிலதாரி பிரிவுகள் ,(GS Division)
6 பிரதேச செயலகப் பிரிவுகள்(2019 சனத்தொகை கணக்கெடுப்பு )
கரைதுறைப்பற்று -30 305
ஒட்டுசுட்டான் -16 444
புதுக்குடியிருப்பு -24919
மாந்தை கிழக்கு-7444
துணுக்காய் -10 145
வெலி ஓயா -7221
4 பிரதேச சபைகள்
கரைதுறைப்பற்று
புதுக்குடியிருப்பு
மாந்தை கிழக்கு
துணுக்காய்
முல்லைத்தீவு மாவட்டம் கல்வி நிர்வாகத்திற்காக துணுக்காய், முல்லைத்தீவு என 2 கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இன ரீதியாக தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் என மூவின மக்கள் வாழ்கின்ற போதிலும் அதிகப்படியாக தமிழர் வாழ்கின்றனர். இங்கு 86% தமிழர்களாகவும் 14%ஏனையவர்களும் வாழ்கிறார்கள்.
75% சைவர்
11% கிறித்தவர்
6% முஸ்லிம்கள்
8% புத்தர்
முல்லைத்தீவு மாவட்டம் 4 பிரதான வாவிகளை கொண்டுள்ளது மாத்தளன் ,நந்திக்கடல் ,நாயாறு &கொக்கிளாய்.காலநிலை
உலர் வலயத்தில் அமைந்துள்ளதால் மிதமான வெப்ப நிலை காணப்படும். வடகீழ் பருவக்காற்றின் மூலம் அதிகளவிலும், தென்மேற்கு பருவக்காற்றின் மூலம் குறைந்தளவிலும் மழைகிடைப்பதால், ஒக்டோபர் முதல் ஜனவரி வரையான காலம், வெப்பநிலை குறைவாக காணப்படும்.
பொதுவாக வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் – 39.3 பாகை செல்சியஸ்என்ற வீச்சில் அமைந்திருக்கும்.சராசரி வருடாந்தம் மழைவீழ்ச்சி1300மிமீ- 2416மிமீ ஆக இருக்கும். இலங்கையிலேயே நிலப்பயன்பாட்டில் பெரும்பகுதி காடுகளால் நிறைந்துள்ள மாவட்டங்களில் முல்லைத்தீவு முக்கியமானது. இங்குள்ள காடுகளில், வைரமரங்களான, முதிரை, பாலை, வீரை, காட்டாமணக்கு, ஒதி முதலிய மரங்கள் இயற்கையாக காணப்படுகின்றன. அவற்றை விட பனைகளும், தென்னைகளும் கொண்ட தோப்புக்கள் நிறைய உள்ளன. தேக்கு மரங்கள் நாட்டப்பட்ட செயற்கை காடுகள் இங்கு நிறைய காணலாம்.
புதுக்குடியிருப்பு 19 நிலதாரி பிரிவுகள் காணப்படுகின்றன
கோம்பாவில்
புதுக்குடியிருப்பு மேற்கு
சிவநகர்
புதுக்குடியிருப்பு கிழக்கு
மல்லிகைத்தீவு
ஆனந்தபுரம்
மந்துவில்
விசுவமடு மேற்கு
விசுவமடு கிழக்கு
மாணிக்கபுரம்
வள்ளுவர்புரம்
மன்னாகண்டல்
தேராவில்
சுதந்திரபுரம்
தேவிபுரம்
வள்ளிபுனம்
உடையார்கட்டு வடக்கு
உடையார்கட்டு தெற்கு
இரணைப்பாலை
கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 45 நிலதாரிப் பிரிவுகள் காணப்படுகின்றன.
வற்றாப்பளை
முல்லைத்தீவு நகர்
கள்ளப்பாடு வடக்கு
கள்ளப்பாடு தெற்கு
முள்ளியவளை நடு
முள்ளியவளை தெற்கு
வண்ணான்குளம்
முள்ளியவளை மேற்கு
முள்ளியவளை கிழக்கு
புதரிக்குடா
செல்வபுரம்
உப்புமாவெளி
மருதங்குடியிருப்பு
முள்ளியவளை தெற்கு
தண்ணியூற்று மேற்கு
குமுழமுனை மேற்கு
கணுக்கேணி கிழக்கு
கணுக்கேணி மேற்கு
முள்ளியவளை வடக்கு
அலம்பில் வடக்கு
அலம்பில் தெற்கு
செம்மலை
இச்சிராபுரம்
கோயில்குடியிருப்பு
சிலாவத்துறை
கொக்குளாய் கிழக்கு
கொக்குளாய் மேற்கு
நீராவிப்பிட்டி கிழக்கு
சிலாவத்துறை தெற்கு
மதவலசிங்கன்குளம்
நீராவிப்பிட்டி மேற்கு
மாமூலை
கருநாட்டுக்ககேணி
குமுழமுனை கிழக்கு
குமுழமுனை நடு
தண்ணீரூற்று கிழக்கு
செம்மலை கிழக்கு
குமரபுரம்
தண்ணிமுறிப்பு
கொக்குத்தொடுவாய் தெற்கு
கொக்குத்தொடுவாய் வடக்கு
கொக்குத்தொடுவாய் நடு
முள்ளிவாய்க்கால் கிழக்கு
முள்ளிவாய்க்கால் மேற்கு
அம்பலவன்பொக்கணை
கேப்பாப்புலவு
மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 15 நிலதாரி பிரிவுகள் இருக்கின்றன
வன்னிவிளாங்குளம்
அம்பாள்புரம்
கொல்லவிளாங்குளம்
ஒட்டறுத்தகுளம்
சிவபுரம்
பாலிநகர்
கரும்புள்ளியான்
பூவரசன்குளம்
பாண்டியன்குளம்
செல்வபுரம்
மூன்றுமுறிப்பு
நட்டாங்கண்டல்
விநாயகபுரம்
பொன்னகர்
சிராட்டிகுளம்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 27 நிலதாரிப் பிரிவுகள் காணப்படுகின்றன
கணேசபுரம்
முத்துவிநாயகபுரம்
தட்டையாமலை
வித்தியாபுரம்
கற்சிலைமடு
பணிக்கன்குளம்
திருமுருகண்டி
இந்துபுரம்
மாங்குளம்
முத்தையன்கட்டுக்குளம்
கனகரத்தினபுரம்
ஒட்டுசுட்டான்
பண்டாரவன்னி
கருவேலன்கண்டல்
கூழாமுறிப்பு
புளியங்குளம்
பேராறு
பழம்பசி
காதலியார்சம்மேலன்குளம்
தண்டுவான்
பெரியத்திமடு
ஒதியமலை
பெரியகுளம்
ஒலுமடு
தச்சடம்பன்
அம்பாகமம்
மணவாளன்பட்டிமுறிப்பு
துணுக்காயின் பதினைந்து நிலதாரிப் பிரிவிகள் காணப்படுகின்றன
துணுக்காய்
கல்விளான்
உயிலங்குளம்
யோகபுரம் மேற்கு
மல்லாவி
யோகபுரம் நடு
திருநகர்
பு த்துவெட்டுவான்
அமைதிபுரம்
அம்பலப்பெருமாள்குளம்
ஆலங்குளம்
தேராங்கண்டல்
யோகபுரம் கிழக்கு
புகழேந்தி நகர்
பாரதி நகர்
அனிஞ்சியன்குளம்
தென்னியன்குளம்
பழையமுறிகண்டி
ஐயன்கன்குளம்
கோட்டைகட்டியகுளம்
இந்து ஆலயங்கள்
ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம்
வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில்
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்
புதுக்குடியிருப்பு கந்த சுவாமி ஆலயம்
புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் ஆலயம்
புதுக்குடியிருப்பு சிவன் ஆலயம்
ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம்
குமாரபுரம் சித்திர வேலாயுதர் ஆலயம்
கரைச்சிக்குடியிருப்பு வீரகத்திப்பிள்ளையார் கோவில்
வட்டுவாகல் சப்தகன்னியர்
அம்பகாமம் அம்மன் ஆலயம்
பனங்கமம் சிவன் கோயில்
கணுக்கேணி கற்பக விநாயகர் ஆலயம்
குமுழமுனை கொட்டுகிணத்தடிப் பிள்ளையார் ஆலயம்
சிவபுரம் சிவபுரநாதர் ஆலயம்
மூன்று முறிப்பு கண்ணகை அம்மன் ஆலயம்
பனங்காமம் சிவன் கோவில்
வன்னிவிளாங்குளம் அம்மன் கோவில்
கிறிஸ்துவ ஆலயங்கள்
புதுக்குடியிருப்பு சூசையப்பர் ஆலயம்
புதுக்குடியிருப்பு குழந்தை யேசுபதி ஆலயம் இரணைப்பாலை குழந்தை யேசுபதி ஆலயம்
முள்ளியவளை புனித திரேசாள் ஆலயம்
மாமூலை அந்தோணியார் ஆலயம்
பாடசாலைகள்
புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி
முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி
மல்லாவி மத்தியகல்லூரி
முல்லைத்தீவு மகாவித்தியாலயம்
முல்லைத்தீவுஇந்து தமிழ்க்கலவன் பாடசாலை
முல்லைத்தீவு முஸ்லிம் மகாவித்தியாலயம்
றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை
சம்பத் நுவர கல்லூரி
வெட்டுவாய்க்கால் பாடசாலை
அம்பலவன் பொக்கணை மகாவித்தியாலயம்
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம்
பண்டாரவன்னியன் மகாவித்தியாலயம்
முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம்
மாங்குளம் மகாவித்தியாலயம்
யோகபுரம் மத்திய மகாவித்தியாலயம்
கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலயம்
பாண்டியன்குளம் மத்திய மகாவித்தியாலயம்
பாலிநகர் மகாவித்தியாலயம்
நட்டான்கண்டல் வித்தியாலயம் வன்னிவிளாங்குளம் வித்தியாலயம்
வினாயகர்புரம் வித்தியாலயம்
புதுக்குடியிருப்பு றோ.கா வித்தியாலயம், இரணைப்பாலை றோ.கா மகாவித்தியாலயம்,
விசுவமடு மகாவித்தியாலயம்
உடையார்கட்டு மகாவித்தியாலயம்
ஐயன்கன்குளம் மகாவித்தியாலயம்
வள்ளிபுனம் மகாவித்தியாலயம்
பாரதி மகாவித்தியாலயம்
புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்ரமணியவித்தியாசாலை
முள்ளியவளை தமிழ் வித்தியாலயம்
முள்ளிவாய்க்கால் கனிஸ்ட்டா வித்தியாலயம்
செம்மலை மகாவித்தியாலயம்
குமுழமுனை மகாவித்தியாலயம்
வற்றாப்பிளை மகாவித்தியாலயம்
உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயம்
சிலாவத்தை தமிழ் வித்தியாலயம்
அளம்பில் றோ.கா வித்தியாலயம், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலைகள்
முல்லைத்தீவுமாவட்டவைத்தியசாலை,
புதுக்குடியிருப்பு ஆதாரவைத்தியசாலை,
மல்லாவி ஆதாரவைத்தியசாலை,
மாங்குளம் ஆதாரவைத்தியசாலை
ஓட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை,
நட்டாங்கண்டல்பிரதேசவைத்தியசாலை,
முல்லைத்தீவுபிரதேச வைத்தியசாலை,
மூங்கிலாறு பிரதேசவைத்தியசாலை,
கொக்கிளாய் பிரதேச வைத்தியசாலை,
அளம்பில் பிரதேச வைத்தியசாலை,துணுக்காய் ,தேவிபுரம் ,குமுழமுனை ,ஐயன்கன் குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம்
வடக்கு மாகாண சபை -38 வட மாகாண உறுப்பினர்களின் எண்ணிக்கை மாவட்டரீதியாக
முல்லைத்தீவு -05
வவுனியா – 06
மன்னார் – 05
கிளிநொச்சி -04
யாழ்ப்பாணம் – 16
இது தான் மண் வாசனை என்பதை வன்னி பிரதேசத்தத்தை களமாகக் கொண்டு பாலமனோகரன், முல்லைமணி , அருணா செல்லத்துரை பேராசிரியர் சு .வித்தியானந்தன் ,பேராசிரியர் சி .பத்மநாதன், செங்கை ஆழியான், மெட்டாஷ் மெயில் , ரகுநாதன் தாமரை செல்வி முல்லையூரான் திருமதி ஐயம்பிள்ளை புவனா ஆகியோர் நாவல்களையும் இலக்கிய படைப்புகளையும் வரலாற்று குறிப்புக்களையும், படைத்தனர். தமிழ் மக்களின் கடந்த கால வரலாறுகள் யாவும் கொடியதும் நெடியதுமான துயரங்களே .எரிந்து போன தேசமும் அழிந்து போன வாழ்வுமாக யுத்தத்தின் வடுக்களையே எமது மக்கள் இது வரை சுமந்திரிக்கிறார்கள் . பெரும் பகுதி காடுகள் நிறைந்த வன்னி குளமும் குளம் சார்ந்த குடியிருப்புக்களையும் கடலும் கடல் சார்ந்த குடியிருப்புக்களையும் கொண்டிருப்பதால் விவசாயமும் மீன்பிடியுமே இவர்களின் பிரதான தொழிலாகும். இவற்றோடு மந்தை வளர்த்தல் ஏனைய சிறு கைத்தொழில்களையும் மேற்கொள்கின்றனர்.
முல்லைத்தீவின் உயர்ந்த குன்றுகளாக குருந்தூர் மலை ,ஒதியமலை என்பன அடையாளப்படுத்தப்படுகின்றது . முல்லைதீவில் காணப்படும் பிரபல ஆறுகளாக நாயாறு, பேராறு ,பாலிஆறு ,மாஓயா என்பவற்றை குறிப்பிடலாம்.. வன்னியில் காணப்படும் பெரிய குளங்களாக முத்தையன்கட்டுக்குளம் ,வவுனிக்குளம் ,தண்ணிமுறிப்பு குளம், மடவலசிங்கன்குளம்,உடையார்கட்டுக்குளம்,விசுவமடுகுளம்,மருதமடுக்குளம், ஐயன்கன்குளம், கோட்டைகட்டியகுளம், தென்னியன் குளம் ,
அம்பல பெருமாள்குளம், தேறங்கண்டல் குளம் என்பவற்றை குறிப்பிடலாம்.
போராட்டம் ஒரு மகத்தான சக்தி மையம். இது புதிய உலகை புதிய சமுதாயத்தை படைக்கும் வரலாற்று விதைகள் . இலங்கை இந்திய அரசுக்கு எதிரான ஈழ விடுதலை போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மிக காத்திரமான பங்களிப்புண்டு .மிக இக்கட்டான சூழ்நிலைகளில் போரியல் வலுவையும், போராளிகளையும் அதன் சார்ந்த மக்களையும் தாங்கி நின்ற பெருமை வன்னி மண்ணிக்கே உரியது .இதனாலேயே முல்லைத்தீவின் மணலாற்றுப் பகுதி ஈழ தேசத்தின் இதயமாக கணிக்கப்படுகிறது .
முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் நொறுக்கி அதனிடத்தில் பாட்டாளிகளின் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் ஏற்படுத்த வேண்டியது பொறுப்பன மார்க்கிஸம் லெனினிசம் மாவோ சிந்தனை போதிக்கின்றது . விசாலமான கிராம புறங்களில் புரட்சிகரத் தளங்களை ,தொழிற்சாலைகளை தோற்றுவித்து ,இந்த தள பிரதேசங்களில் மக்களை தொழில்ரீதியாகவும் சிந்தனைரீதியாகவும் பயிற்றுவிப்பதன் மூலமே தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் விடுதலை பெற முடியும் . நவீன வசதிகளுடைய பாடசாலைகள் , நவீன வசதிகளுடைய வைத்தியசாலைகள், புதிய பிரதேச சபைகள் ,நவீன விளையாட்டு மைதானங்கள்,சுற்றுலாதலங்கள் உட்கட்டுமான அபிவிருத்திகள் விருத்தி செய்யப்பட வேண்டும் . வரலாற்று தடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாளைய முல்லைத்தீவு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அரசியல்வாதிகள் ,புத்திஜீவிகள் ,உயிர்த்துடிப்புடனான கொள்கைகளைக் கொண்ட மார்க்சிச லெனினிய தேசியவாதிகள், தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகள், சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் ஒரே திசையில் பயணித்தல் காலத்தின் கட்டாயமாகும்.