கூட்டமைப்பினர் விரைவில் புதுடில்லி பயணம்!
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் மீண்டும் புதுடில்லியில் சந்திப்போம்.”
இவ்வாறு இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“தங்களை விரைவில் மீண்டும் புதுடில்லியில் சந்திப்போம். அது குறித்த சந்திப்பு திகதி இந்தியத் தூதரகம் ஊடாக அறிவிக்கப்படும்” என்றும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார் என்று சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.