டி20 உலக கோப்பையிலிருந்து முழுவதுமாக விலகிய சாம் கரன்.

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே அணியில் ஆடிவந்தார் சாம் கரன். சீனியர் ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோவின் இடத்தில் சாம் கரன் ஆடிவந்தார். இந்த சீசனின் அமீரக பாகத்தில் சாம் கரன் சரியாக ஆடவில்லை. பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே அவர் சோபிக்கவில்லை.
இந்த சீசனின் 2ம் பாகத்தில் அவர் திணறிவந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடியபோது சாம் கரனுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த போட்டிக்கு பின்னர் ஸ்கேன் செய்து பார்த்ததில் காயம் சீரியஸனதாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ள சாம் கரன், டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சாம் கரன் இடம்பெற்றிருந்தார். இந்த காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அவரது அண்ணன் டாம் கரன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்னும் 2 நாட்களில் சாம் கரன் அமீரகத்திலிருந்து இங்கிலாந்துக்கு திரும்புகிறார்.