மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து…

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
மேலும் இந்நிலையில், டெங்கு நோய் பரவும் வகையில் சூழலை சுத்தப்படுத்தாமல் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.