ஐ.நா.சபைக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை…
வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயற்பட வேண்டும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி ,ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஏவுகணை சோதனையைத் தொடங்கியுள்ள வடகொரியா ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளைப் பரிசோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தச் சூழலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை கடந்த வெள்ளிக்கிழமை அவசர கூட்டமொன்றை நடத்தியது.
மேலும் அந்த கூட்டத்தில் வடகொரியாவின் ஏவுகணை சோதனைக் குறித்து கவலை தெரிவித்த ஐ.நா. பாதுகாப்பு சபை, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு தடைவிதிக்கும் சபையின் தீர்மானங்களை முழுமையாகச் செயற்படுத்த வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்தது.
அந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.