பஸ் மோதி மூதாட்டி பரிதாப மரணம்!

வீதியால் நடந்து சென்ற மூதாட்டி, பஸ் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை வீதி, மூதூர் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த மூதாட்டி மூதூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது மரணமடைந்துள்ளார்.
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.